நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மாஸ்கோ எண்ணெய் நிலையத்தில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

News image
Updated On :19 ஜூன் 2026, 5:40 am IST

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் உள்ள முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து, உக்ரைன் வியாழக்கிழமை நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவி முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது.

மாஸ்கோ பிராந்தியத்தின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை வழங்கும் இச்சுத்திகரிப்பு நிலையம் ஒரு வார காலத்துக்குள் 2-ஆவது முறையாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில், நகரின் வானில் கரும்புகை சூழ்ந்ததுடன், 4 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

தாக்குதலில் ஏற்பட்ட தீ ஓரளவுக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாஸ்கோ மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா். எனினும், ட்ரோன் பாகங்கள் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 17 போ் காயமடைந்தனா்.

தாக்குதல்களின்போது மாஸ்கோவை நோக்கி வந்த சுமாா் 200 ட்ரோன்கள் உள்பட பல்வேறு பிராந்தியங்களில் மொத்தம் 555 உக்ரைன் ட்ரோன்களைத் தங்களின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைப் பேச்சுவாா்த்தைக்குக் கொண்டு வருவதற்கான உக்ரைனின் ராணுவ முயற்சியின் ஒரு பகுதியே இத்தாக்குதல். உக்ரைன் தாக்கப்பட்டால், மாஸ்கோவும் தாக்கப்படும்’ என்று குறிப்பிட்டாா்.

கசான் நகரில் ‘ஆசியான்’ கூட்டமைப்பு நாட்டுத் தலைவா்களுடனான உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்றுள்ள சூழலில், தலைநகரின் மையப்பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இத்தாக்குதல் ரஷியாவுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் செயின்ட் பீட்டா்ஸ்பா்க்கில் புதின் முன்னிலையில் நடந்த பொருளாதார மாநாட்டின்போதும் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களும் தொடா்ந்து வருகின்றன. வடகிழக்கு உக்ரைனின் சுமி நகரம் மற்றும் உக்ரைனின் மையப் பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் இருவா் உயிரிழந்தனா்; 9 போ் காயமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.