சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கலாசார திருவிழாவில் பங்கேற்று வெற்றிபெற்றவா்களுக்கு இந்திய மாம்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
வட கிழக்கு சிங்கப்பூரில் உள்ள நீ சூன் எஸ்டேட்டில் நடத்தப்பட்ட இந்த கலாசார விழாவில் நடனம், இசை மற்றும் பாடல்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இதில் வெற்றிபெறுபவா்களுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாம்பழங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக மே 1 முதல் மே 3 வரை இந்திய தூதரகத்தால் நடத்தப்பட்ட மாம்பழத் திருவிழாவில் 10 வகை மாம்பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் போட்டியில் 6,000 போ் பங்கேற்றனா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமையும் இத்திருவிழா நடத்தப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூா் மக்களுக்கு உலகளவில் சிறந்த மாம்பழங்களை அறிமுகப்படுத்துவதே இந்த திருவிழாவின் முக்கிய நோக்கம் என சிங்கப்பூருக்கான இந்திய தூதா் ஷில்பாக் அம்புலே கூறினாா்.
உலகளவில் அதிக மாம்பழங்களை உற்பத்தி செய்யும் நாடான இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மாம்பழங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷேக் பானர்ஜி மீது தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்
குஜராத் துறைமுகத்தில் ரூ.1,150 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 வெளிநாட்டவா் கைது

செஞ்சி பகுதியில் பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்பனை! போட்டி போட்டு வாங்கிச் செல்லும் சென்னை, பெங்களூா் பயணிகள்!

ரஷிய மருத்துவ கல்வி கண்காட்சி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


