மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீனா - வட கொரியா நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம்!

சீனா - வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.

News image

சீனா - வடகொரியா செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு காத்திருக்கும் பயணிகள். - AP

Updated On :30 மார்ச் 2026, 7:34 am

சீனா - வடகொரியா விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கப்பட்டது.

சீனாவின் பெய்ஜிங் நகர் முதல் வடகொரியாவின் பியான்யாங் நகருக்கு பயணிகள் விமான சேவை 6 ஆண்டுகளுக்குப் பின் இன்று மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இன்று வட கொரியா சென்றுள்ள சீனா ஏர் பயணிகள் விமானத்தை வட கொரியாவிற்கான சீனத் தூதர் உள்பட பலரும் அங்கு வரவேற்றனர்.

இரு நாடுகளுக்குமிடையே ரயில் சேவை கடந்த மார்ச் 12 அன்று தொடங்கியது.

கோவிட் பெருந்தொற்று காலம் தொடங்கிய 2020 முதல் சீனா - வடகொரியா இடையே ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டது.

பெருந்தொற்று காலத்தில் மற்ற நாட்டு பயணிகளுக்குத் தடை விதித்த வட கொரியா 2024-ம் ஆண்டு ரஷிய பயணிகளுக்கு அனுமதியளித்தது.

பெருந்தொற்று தடைக்கு முன்னர் வட கொரியாவுக்கு செல்லும் பயணிகளில் 90% பேர் சீனர்களாக இருந்தனர். ஆனால், பின்னர் மீண்டும் அந்த பயணத்தைத் தொடங்குவதற்கு சீனா தாமதப்படுத்தியதன் காரணம் தெரியவில்லை.

சீனா வடகொரியாவுடன் சிறந்த வணிக உறவைப் பேணி வருகிறது. ஆனால், தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது தாக்குதலுக்கு வட கொரியா நடத்தும் ஏவுகணைச் சோதனைகளுக்கு சீனா தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வருகிறது.

கடந்தாண்டு செப்டம்பரில் வட கொரிய அதிபர் கிம் ஜான் உங் ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள சீனாவின் பெய்ஜிங் வந்தார். வட கொரிய அதிபர் ஒருவர் பல ஆண்டுகளுக்குப் பின் சீனாவுக்கு வந்தது அதுவே முதல்முறை.

Summary

China resumes direct flights to North Korea after six years

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.