மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!

முதல்முறையாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளது குறித்து...

News image

வடகொரியாவில் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ.. - AP

Updated On :25 மார்ச் 2026, 10:29 am

பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முதல்முறை அரசு முறைப் பயணமாக வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.

உக்ரைன் மீதான போரில், வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரஷியாவுக்காகப் போரில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், பெலாரஸ் நாட்டின் ராணுவத் தளங்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரியாகக் கருதப்படும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ புதன்கிழமை (மார்ச் 25) அன்று முதல்முறை அரசு முறைப் பயணமாக வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிபர் லுகாஷென்கோவின் இந்த 2 நாள் பயணத்தில், இருநாடுகளுக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, கடந்த 2025 செப்டம்பரில் சீனாவில் நடைபெற்ற ராணுவப் பேரணியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ நேரில் சந்தித்து உரையாடினர்.

இத்துடன், மனித உரிமை மீறல் மற்றும் ரஷியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவது உள்ளிட்ட புகார்களைத் தொடர்ந்து வடகொரியா மற்றும் பெலாரஸ் மீது மேற்குலக நாடுகள் பல தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Belarusian President Alexander Lukashenko has made his first official visit to North Korea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.