தெற்கு லெபனானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
லெபனானில் மஜ்தல் செல்ம், காஃப்ரா, ஹன்னியா, டோலின், அட்லோன் நகரங்களின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக லெபனான் அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நபேத்தியா நகரில் பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகள், வணிகக் கட்டிடங்கள் மற்றும் எரிபொருள் நிலையம் மீதும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
அதேநேரத்தில், லெபனான் எல்லையில் உள்ள நகரங்களான தைய்பே, லிதானி ஆகிய நகரங்களில் இஸ்ரேல் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் கூறப்படுகின்றது.
லெபனான் முழுவதுமுள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்று இஸ்ரேல் ராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் பல தளங்களின் மீது நேற்று (மார்ச் 27) ஒரே இரவில் தாக்குதல் நடத்தி அந்த அமைப்பின் இரு மூத்த உறுப்பினர்களைக் கொன்றதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனானின் டெபெல் பகுதியில் பதுங்கியிருந்த இஸ்ரேலிய எதிரிப் படையின்மீது டிரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்ததாக ஹிஸ்புல்லா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் வடக்கு தலைமையகத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Summary
Israel strikes towns across southern Lebanon, targetting residential and commercial buildings
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்! போர் விமானத்தை விரட்டிய ஹிஸ்புல்லா?

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


