மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் கொல்லப்பட்டது குறித்து...

News image

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி... (கோப்புப் படம்) - AP

Updated On :9 ஏப்ரல் 2026, 11:35 am

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இந்தப் போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 2 ஆம் தேதி முதல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலின் படைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ரூட்டினுள் ஊடுருவியுள்ளன. இதையடுத்து, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் கடந்த ஏப். 7 அன்று 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், பெய்ரூட் மீது புதன்கிழமை (ஏப். 8) அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 182 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் பெய்ரூட்டில் 100-க்கும் அதிகமான இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது எனவும், அமைதி ஒப்பந்தத்தில் லெபனான் இணைக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஆனால், ஈரான் மற்றும் மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் அரசு ஆகியவை போர்நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The death toll from Israel's attack on Lebanon's capital, Beirut, has been announced as 182.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.