லாகூர் : பாகிஸ்தானில் ரயில் தடம் புரண்டதில் 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானின் லாகூர் நகரிலிருந்து சுமார் 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள லோத்ரான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) இரவில் ரயில் ஒன்று விபத்துக்குள்ளானது. லாகூர் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலையில் புறப்பட்டு கராச்சிக்குச் சென்று கொண்டிருந்த டேஸ்காம் எக்ஸ்பிரஸ், ஆதாம் வாஹன் ரயில் நிலையத்தை அன்றைய இரவு 9.30 மணியளவில் சென்றடைந்தபோது, ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர மீட்புப்பணி துறையினர், விபத்துக்குள்ளான பெட்டிகளில் சிக்கிய பயணிகளை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அந்தப் பெட்டிகளில் இருந்தவர்களில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்டிகளை ஒன்றோடொன்று இணைக்கும் இணைப்பாண்கள் உடைந்ததால் ரயில் பெட்டிகள் பிரிந்து சென்று விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் இன்று(மார்ச் 25) தெரிவித்தனர். இதன் காரணமாக, பஹவால்பூர் - லோத்ரான் ரயில் வழித்தடத்தில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை தொடருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Summary
At least 25 people were injured when seven coaches of a train derailed in Punjab province of Pakistan, officials said on Wednesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

டிக்கெட் முன்பதிவு! ரயில்வேயின் புதிய மாற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



