பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருப்பதாக பாகிஸ்தான் தினமான இன்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக ஆப்கன் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில் கடந்த சில மாதங்களாக இரு நாடுகளும் எல்லை தாண்டிய தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆப்கனில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது கடந்த வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் கொல்லப்பட்டனர்.
போர்நிறுத்தம் தொடர்பாக சீனா மற்றும் வளைகுடா நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில் அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக அமைதி பேச்சுவார்த்தை மேலும் நடத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, ரமலான் பண்டிகை காரணமாக கடந்த மார்ச் 18 முதல் மார்ச் 23 நள்ளிரவு வரை இரு நாடுகளும் தற்காலிகமாகப் போர்நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டன.
தற்காலிக போர்நிறுத்தம் இன்றுடன் முடிவடையும் நிலையில், பாகிஸ்தான் தினமான இன்று பாக். வெளியுறவுத் துறை அமைச்சர் வாழ்த்துகளைத் தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. ஆப்கனில் பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அதனை நோக்கியதே” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆப்கானிஸ்தானுக்குள் எடுக்கப்பட்ட நமது ராணுவ நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய உறுதிபாட்டின் சின்னம். நமது தேசத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்த நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே மீண்டும் போர் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
Pakistan vows to 'eradicate terrorism' as Afghan truce nears end
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!

ஈரான் அதிகாரிகளை சந்தித்த பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

ஈரான் - அமெரிக்கா அமைதிப்பேச்சு! சௌதி, கத்தார், துருக்கி செல்கிறார் பாக். பிரதமர்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



