ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
ஈரானுடனான போருக்கு நேட்டோ அமைப்பு உதவவில்லை என விமர்சித்துள்ள டிரம்ப், தனது சமூக வலைதளத்தில், "அமெரிக்கா இல்லாமல், நேட்டோ அமைப்பு ஒரு காகிதப் புலி போன்றது.
அணு ஆயுதம் கொண்டிருக்கும் ஈரானுடனான போரில் சேர அவர்கள் (நேட்டோ) விரும்பவில்லை.
ஆனால், இப்போது இந்தப் போர் ராணுவரீதியாக வெற்றி பெற்றது. அவர்களுக்கும் இப்போது குறைந்தளவே ஆபத்து உள்ளது.
எண்ணெய்க்கான அதிக விலையை செலுத்த அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டபோதிலும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அவர்கள் உதவ விரும்பவில்லை. இது ஒரு ராணுவ சூழ்ச்சியே. இதுவே எண்ணெய்யின் அதிக விலைக்கான ஒரே காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் பதிலடி அளித்து வருகிறது. மேலும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்களிக்கும் ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது.
இதனையடுத்து, ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க போர்க் கப்பல்களை அனுப்புமாறு நேட்டோ நாடுகள் உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
Summary
Without the USA, NATO is a paper tiger, says US President Donald Trump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

முட்டாள்களே...! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானை மிரட்டும் டிரம்ப்!
48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



