மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

அலி முகமது நைனி.

Updated On :20 மார்ச் 2026, 9:12 am

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கில் 20 நாள்களைக் கடந்தும், ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் ராணுவங்கள் போர்த்தொடுத்து வருகின்றன. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவர் கமேனி உள்பட 50-க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கடந்த பிப். 28 ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

ஈரானின் முக்கிய எரிவாயு உற்பத்தி மையம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயு மையங்கள் மீது ஈரான் நேற்றிரவு (மார்ச் 19) தீவிர தாக்குதல்களைத் தொடுத்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, “ஈரானிடம் தற்போது யூரேனியம் செறிவூட்டும் திறனோ, பாலிஸ்டிக் ஏவுகணைகள் தயாரிக்கும் திறனோ இல்லை” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (மார்ச் 19) தெரிவித்திருந்தார்.

நெதன்யாகுவுக்கு சவால் விடுக்கும் விதமாக, ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித்தொடர்பாளரும், உயர்நிலை ராணுவத் தலைவருமான அலி முகமது நைனி, “போர்ச்சூழலிலும் நாங்கள் தொடர்ந்து ஏவுகணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், ஆயுதங்களைக் கையிருப்பு வைப்பதிலும் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. தொடர்ந்து ஏவுகணை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சவால் விடுத்த சில மணிநேரங்களிலேயே ஈரானின் புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளன.

அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில் நைனி கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடத்திய கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் நைனி வீரமரணம் அடைந்தார் என புரட்சிகரப் பாதுகாப்பு படையின் ஆதரவு பத்திரிகை நிறுவனம் ‘செபா’ உறுதிபடுத்தியுள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்னர், இஸ்ரேல் ஈரானின் உயர்நிலை ராணுவ பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானியையும், புரட்சிகர காவலர் துணை ராணுவப் படையின் பசிஜ் படைத் தலைவர் ஜெனரல் குலாம்ரெசா சுலைமானியையும் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு தலைவரும் கொல்லப்பட்டது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Spokesman of Iran's Revolutionary Guards (IRGC) Ali Mohammad Naini has been killed, reported state media on Friday as the war with US-Israel continued to rattle the entire Gulf.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.