மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்வு

News image

பிளாஸ்டிக் பாட்டில் - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 3:20 am

ஈரான் போர் காரணமாக, பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்ந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வரும்நிலையில், பிளாஸ்டிக் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால், குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் வரையில் ரூ. 8-க்கு விற்கப்​பட்​ட 200 மி.லி. குடிநீர் பாட்​டில் இன்று ரூ. 10-க்​கும், ரூ.10-க்கு விற்​கப்பட்ட 300 மி.லி. குடிநீர் பாட்​டில் ரூ. 12-க்​கும், ரூ.12-க்கு விற்கப்பட்ட 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்​கும், ரூ. 20-க்கு விற்கப்​பட்​ட ஒரு லிட்​டர் பாட்​டில் ரூ. 25-க்​கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட 2 லிட்​டர் பாட்​டில் ரூ. 35-க்​கும், ரூ. 50-க்கு விற்​கப்பட்ட 5 லிட்​டர் பாட்​டில் ரூ. 70 என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.

மேலும், மீண்டும் பயன்​படுத்​தக்கூடிய கேன்​களில் அடைக்​கப்பட்ட 20 லிட்​டர் குடிநீர் ரூ. 45-ல் இருந்து ரூ. 55-க்​கு உயர்த்தப்பட்டுள்ளது.

பொது​வாக, கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்​கப்​படும் பெட்ரோ ரசாயன பொருள்​கள் மூலமாகவே பிளாஸ்​டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஈரான் போர் காரணமாக, பாலி எத்​திலீன், பிவிசி, பாலி புரோப்பிலீன், பாலிஸ்​டிரீன் போன்​றவற்​றின் விலை சுமார் 40 சதவிகிதம் உயர்ந்​ததையடுத்​து, பிளாஸ்​டிக் பொருளி​கள் விலையும் அதி​கரித்​துள்​ளது.

Summary

Plastic packaging costs surge due to Iran war

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.