இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கிய 19 நாள்களில் மிகப் பெரிய தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அங்கிருந்த ராணுவ நிலைகளை முற்றிலுமாக அழித்தது.
இதனிடையே, கடந்த 2 நாள்களில் ஈரானின் முக்கிய தலைவர்களான தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லார்ஜானி உள்பட மூவர் அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், புதன்கிழமை ஒரே நாளில் வளைகுடாவின் 9 நாடுகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில், உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி மையமான ராஸ் லஃபான் எரிசக்தி மையத்தின் மீது 14 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி ஈரான் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மத்திய இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை குறிவைத்து 6 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 21 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இவை அனைத்தையும் இடைமறித்ததாக அந்நாட்டு அரசு அறிவித்தாலும், எரிசக்தி ஆலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அச்சுறுத்தல் நிலவுவதால் பணிகளை நிறுத்தியுள்ளனர்.
இதேபோல், செளதி அரேபியாவில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் சுத்தகரிப்பு ஆலைகள் மற்றும் பெட்ரோலிய ரசாயன ஆலைகளில் இருந்து பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், பஹ்ரைன், ஜோர்டான், குவைத் நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது.
ஓமனின் தொழிற்சாலை மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஈரானின் தெற்கு பார்ஸின் உள்ள உலகின் மிகப்பெரிய எரிவாயு நிலையத்தை இஸ்ரேல் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த 19 நாள்களில் 500-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2,000 ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
தற்போது உலகின் மிகப்பெரிய எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே போரின் காரணமாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 109 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், ஈரான் தாக்குதலால் சர்வதேச எரிபொருள் விநியோக சங்கிலி முற்றிலும் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.
Summary
From Israel to Qatar...! Iran attacks 9 countries!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



