மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!

ஈரானில் உள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...

News image

இஸ்ரேல் தாக்குதல் (கோப்புப் படம்) - AP

Updated On :18 மார்ச் 2026, 2:44 pm

ஈரானின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஈரானின் புஷேர் மாகாணத்தில் உள்ள அசலூர் பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயலாகக் கருதப்படும் சௌத் பார்ஸ் எரிவாயு வயலின் மீது புதன்கிழமை (மார்ச் 18) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், சௌத் பார்ஸ் எரிவாயு வயலில் அமைந்திருந்த ஒரு எரிவாயு கிடங்கு மற்றும் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவைச் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் எரிவாயு வயலின் மீதான இந்தத் தாக்குதல், மிகவும் ஆபத்தானது எனவும், உலகின் எரிசக்தி பாதுகாப்பிற்குக் கடும் அச்சுறுத்தல் எனவும் குறிப்பிட்டு கத்தார் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலின் தாக்குதலில் அங்கு பரவிய தீயை ஈரானின் தீயணைப்புப் படையினர் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் நல்வாய்ப்பாக இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

Israel has reportedly attacked the world's largest natural gas field in Iran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.