மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

19 ஈரானிய அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது குறித்து...

News image

19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்... - AP

Updated On :11 மார்ச் 2026, 2:53 pm

ஈரானைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஈரானில், கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் நடைபெற்ற மாபெரும் போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 19 அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒடுக்குமுறையின் மூலம் ஈரானின் எதிர்காலம் கட்டமைக்க முடியாது எனவும், இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Summary

The European Union has approved new sanctions against 19 Iranian officials.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.