சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின், சூப்பர் டேங்கர்ஸ் என்று அழைக்கப்படும் ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இரண்டு, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ளன.
ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இரண்டு சூப்பர் டேங்கர்கள், கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைகளில் உள்ள இந்தியத் துறைமுகங்களுக்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் ஈரானிய எண்ணெய் கப்பல்களின் முதல் வருகை இதுவென கப்பல் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானிய தேசிய டேங்கர் நிறுவனத்தால் இயக்கப்படும் மிகப் பெரிய கச்சா எண்ணெய் கப்பலான 'ஃபெலிசிட்டி', மார்ச் மாத நடுப்பகுதியில் கார்க் தீவிலிருந்து நிரப்பப்பட்ட சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் கடற்கரையில் உள்ள சிக்கா அருகே நங்கூரம் போடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது டேங்கர் கப்பல் ஜயா, ஒடிசா கடற்கரையருகே உள்ள பாராதீப் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால், இந்தியாவுக்கு எண்ணெய் கப்பல்கள் வருகை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அமெரிக்கா வழங்கிய தடை விலக்கலைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஈரானிய கச்சா எண்ணெய் கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் காரணமாக, உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஈரான் எண்ணெய்யை விநியோகம் செய்ய அமெரிக்கா ஒரு மாத காலதடை விலக்கலை அறிவித்திருக்கிறது.
பாரதீப துறைமுகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பராமரித்து வருகிறது. அதுபோல சிகா துறைமுகதை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
கடந்த மாதம் குஜராத்தின் வாடினார் துறைமுகத்துக்கு வரவேண்டிய ஈரானிய எண்ணெய் கப்பல், பணப்பரிமாற்ற சிக்கலால் சீனாவுக்குத் திருப்பிவிடப்பட்டிருந்தது. முன்னதாக, ஈரானில் இருந்து அதிகப்பட்டியான எண்ணெய் பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Exactly 7 years later, Iranian oil tankers are anchored in the Indian Ocean.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

போரை விரும்பும் வல்லரசுகள்!

வெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



