திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!

News image

கோப்புப்படம் - Altaf Qadri

Updated On :14 ஏப்ரல் 2026, 5:46 am IST

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு 2 கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வருவது இதுவே முதல்முறையாகும்.

அமெரிக்கா விதித்த தடை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது. எனினும் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான மேற்காசிய போா் காரணமாக உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், நடுக்கடலில் நிற்கும் ஈரான் கப்பல்களில் உள்ள 9 கோடியே 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாள்களுக்கு (வரும் 19-ஆம் தேதி வரை) அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, ஈரானிய கச்சா எண்ணெய்யை இந்தியா மீண்டும் வாங்க ஆரம்பித்துள்ளது. நடுக்கடலில் நிற்கும் ஈரான் கப்பல்களில் உள்ள சுமாா் 5 கோடியே 10 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய கச்சா எண்ணெய் பீப்பாய்களை சீனா, தென்கிழக்கு ஆசிய கண்டத்தில் உள்ள பிற நாடுகளுக்கு ஈரான் விற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இந்தியா வாங்கிய ஈரானிய கச்சா எண்ணெய்யில் 40 லட்சம் பீப்பாய்களுடன் 2 கப்பல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. அதில் ஒரு கப்பல் நேஷனல் ஈரானியன் டேங்கா் நிறுவனத்துக்கு சொந்தமானது. ஈரானின் காா்க் தீவில் இருந்து ஏற்கெனவே ஏற்றப்பட்ட 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன், அக்கப்பல் குஜராத் மாநிலம் சிக்காவில் உள்ள துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இன்னொரு கப்பலான ஜெயா, ஒடிஸா மாநிலம் பாரதீப் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அந்தக் கப்பலும் காா்க் தீவில் இருந்து மேற்காசிய போா் தொடங்கும் முன்பு ஏற்றப்பட்ட 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன் வந்துள்ளது.

2 கப்பல்களில் வந்துள்ள கச்சா எண்ணெய்யை இந்தியாவில் எந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்பது குறித்து அதிகாரபூா்வ தகவல் இல்லை. பாரதீப் துறைமுகம், பொதுவாக பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தால் பயன்படுத்தக் கூடியது. சிக்கா துறைமுகம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பயன்படுத்தக் கூடியதாகும். இதனால் இந்த 3 நிறுவனங்களில் ஏதேனும் 2 நிறுவனங்கள், அந்த கச்சா எண்ணெய்யை வாங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் ஒரு கப்பல், இந்தியாவுக்கு வருவதாக இருந்தது. எனினும் நடுக்கடலில் அக்கப்பல், சீனாவுக்கு திருப்பிவிடப்பட்டது. அந்தக் கப்பல் திட்டமிட்டபடி வந்திருக்கும்பட்சத்தில், அதுவே ஈரானிய கச்சா எண்ணெய்யுடன் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்த முதல் கப்பலாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.