லெபனான் மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 570 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படைகளுக்கு எதிரான இஸ்ரேல் ராணுவம் கடந்த மார்ச் 2 முதல் அந்நாட்டின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதையடுத்து, தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த மார்ச் 2 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் லெபனானில் இதுவரை 570 பேர் கொல்லப்பட்டதாக, அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் புதன்கிழமை (மார்ச் 11) அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, லெபனானில் இதுவரை 439 ஆண்கள், 45 பெண்கள் மற்றும் 86 குழந்தைகள் மற்றும் 14 சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதல்களில் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Summary
The death toll from Israeli military attacks on Lebanon has reportedly risen to 570.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

ஈரானின் போர்நிறுத்தம் இங்கு பொருந்தாது..! லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 182 பேர் பலி!

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 1,001 பேர் பலி! 118 குழந்தைகள் கொல்லப்பட்டனர்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


