மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!

நைஜீரியாவில் ஒரே நாளில் 300-க்கும் அதிகமான மக்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது குறித்து...

News image

நைஜீரியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்.. (கோப்புப் படம்) - AP

Updated On :7 மார்ச் 2026, 7:47 am

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், ஒரே நாளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தின் ந்கோஷே பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 6) தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் உள்பட 300-க்கும் அதிகமான மக்களைக் கடத்திச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.

இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்தக் கடத்தலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இத்துடன், கடந்த மார்ச் 5 முதல் நைஜீரியாவின் கொண்டுங்கா, மார்ட்டே, ஜகானா மற்றும் மைனோக் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மீதும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக, அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

நீண்டகாலமாக நைஜீரியாவில் போக்கோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

In Nigeria, 300 people, including women and children, were kidnapped by terrorists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.