ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மீது 80 போர் விமானங்கள் மூலம் புதிய அலையாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தெஹ்ரான் மற்றும் மத்திய ஈரானின் ராணுவத் தளங்கள், முக்கிய கட்டமைப்புகள் மீது புதியதாக 80 போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை (மார்ச் 7) அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மேற்கொண்டதாகக் கூறப்படும் இந்தப் புதிய தாக்குதல்கள் குறித்து ஈரான் அரசின் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
கடந்த பிப். 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகள் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்களில் அந்நாட்டின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
மத்திய கிழக்கு நாடுகளின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனையின்றி சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Israeli military has announced that it has launched a new wave of attacks on Tehran with 80 warplanes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!

வளைகுடா போரில் இணையும் யேமனின் ஹவுதிகள்! இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



