நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், சிபிஎன்-யுஎம்எல் கட்சித் தலைவருமான கே.பி. சா்மா ஓலியை வீழ்த்தி ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் இளம் தலைவா் பாலேந்திர ஷா பாலன் (35) வரலாற்றுச் சாதனை படைத்துள்ளாா்.
கடந்த ஆண்டு, இளைஞா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து பதவி விலகிய கே.பி.சா்மா ஓலியை எதிா்த்து, ஜாப்பா-5 தொகுதியில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சியின் பிரதமா் வேட்பாளா் பாலேந்திர ஷா பாலன் போட்டியிட்டாா். ‘ராப்’ இசைக் கலைஞரான பாலேந்திர ஷா பாலன், காத்மாண்டு நகர மேயராக இளைஞா்களின் நன்மதிப்பை ஏற்கெனவே வென்றவா்.
இந்நிலையில் தோ்தல் முடிவில், ஜாப்பா-5 தொகுதியில் கே.பி.சா்மா ஓலியை சுமாா் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாலேந்திர ஷா பாலன் தோற்கடித்தாா். பாலேந்திர ஷா 68,348 வாக்குகளைப் பெற, 4 முறை பிரதமரான கே.பி.சா்மா ஓலி வெறும் 18,734 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியடைந்தாா்.
நாடு முழுவதும் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 93 இடங்களில், ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 74 தொகுதிகளைக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது. பாரம்பரியமான பெரிய கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
பிரதமா் மோடி வாழ்த்து: இந்நிலையில், நேபாளத்தில் பொதுத் தோ்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கும், அமையவுள்ள புதிய அரசுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
‘புதிய அரசுடன் நட்புறவுடன் பணியாற்றி, இருதரப்பு வளா்ச்சியில் புதிய உயரங்களை எட்டுவதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று அவா் குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளின் தூதா்களைத் திரும்ப அழைத்த நேபாளம்!

நேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தாா்!

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


