அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதில், சௌதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்கி வருவதால் மத்திய கிழக்கில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், இந்தப் போரில் ஈரானால் தாக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என ஈரானின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அந்நாட்டின் அரசுத் தொலைக்காட்சி சேனலின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, சனிக்கிழமை (மார்ச் 7) அவர் கூறியதாவது:
“இனி அண்டை நாடுகளால் ஈரான் தாக்கப்பட்டால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்தப்படும். இந்த விவகாரத்தை நாம் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Iranian President Masoud Pezeshkian has apologized to countries attacked by Iran in its war against the United States and Israel.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

ஈரானின் புலனாய்வு அமைச்சர் கொல்லப்பட்டார்! - உறுதி செய்தார் அதிபர் பெஷேஷ்கியன்!

போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்!

அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு! ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



