அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை ஈரான் அரசு ஒருபோதும் மேற்கொள்ளாது என ஈரானின் மறைந்த தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவப் படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டன. இதில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மற்றும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மீதும் ஈரானின் படைகள் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன.
இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், பல்வேறு நாடுகளின் அரசுகள் இருதரப்பும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் திட்டம் ஈரான் அரசுக்கு இல்லை என கமேனியின் மூத்த ஆலோசகர் முகமது மொக்பெர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“அமெரிக்கர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய எந்த அடிப்படையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் விரும்பும் வரையில் இந்தப் போரை எங்களால் தொடர முடியும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி அந்நாட்டின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Mohammad Mokhber, an advisor to Iran's late Supreme Leader Ayatollah Ali Khamenei, has said that the Iranian government will never negotiate with the United States.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘ஆணவமிக்க சா்வதேச சக்திகளுக்கு எதிராக போராட்டம் தொடரும் ’: ஈரானின் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!

ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு! கமேனியின் மகன் பதவியேற்க வாய்ப்பு

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



