ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தின் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மீது சனிக்கிழமை (பிப். 28) இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால், அந்நகரத்தின் வானம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்றுள்ளதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த தாக்குதலின்போது 86 வயதான கமேனி அவரது அலுவலகத்தில் இருந்தாரா? அவரது நிலை என்ன? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையில் நடைபெற்ற 12 நாள் போரில் ஆயிரக்கணக்கான மக்கள், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Israel has reportedly carried out an attack near the office of Iran's Supreme Leader Ayatollah Ali Khamenei.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!

அமெரிக்கர்கள் மீது நம்பிக்கையில்லை; பேச்சுவார்த்தை நடத்த முடியாது! - ஈரான் திட்டவட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



