மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரினையைக் கடந்து செல்லப்படும் கப்பல்கள் தாக்கப்படும் என்றும், தீக்கரையாக்கப்படும் என்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமைத் தளபதி இப்ராஹிம் ஜபாரி எச்சரித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய ட்ரோன்களை சவூதி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்புக் கருதி, அந்த நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த மோதல் போக்கினால், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் மற்றும் ஓமன் இடையே அமைந்துள்ள இந்த ஜலசந்தி, உலகளாவிய வர்த்தகத்தில் மிக முக்கியமானதாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடனும், அதற்கு அப்பால் அரேபிய கடலுடனும் இணைக்கிறது. ஹோர்முஸ் நீரிணையானது ஈரான் மற்றும் ஓமன் எல்லையாக இருந்தாலும், இது ஒரு சர்வதேச கப்பல் வழித்தடமாகவுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது.
இதன் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 7.4 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 71.97 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7.7 சதவீதம் அதிகரித்து, 78.46 டாலராகவும் வர்த்தகமானது.
Summary
Iran has announced that it will close the Strait of Hormuz, the world's main oil transportation route, due to the war situation in the Middle East.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

அமெரிக்க முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்! - ஈரான் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணை: சீன, ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



