சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ராணுவத்தினர் நடத்திய அதிரடி டிரோன் தாக்குதலில், தூதரகக் கட்டடம் மற்றும் அருகில் இருந்த கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன.
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகளும் சேர்த்து கடந்த சனிக்கிழமை நடத்திய அதிரடி தாக்குதலில் ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. மேலும், அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இந்தப் போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், சௌதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தாக்குதல் நடத்தியதில் கட்டடங்கள் முழுமையாக சேதமடைந்தன.
மத்திய கிழக்கு நாடுகள் நான்கு நாள்களாக பற்றி எரிந்து வரும் நிலையில், இந்த டிரோன் தாக்குதலை சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சௌதி மத்திய அமைச்சகம வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்க தூதரக வளாகத்தை இரண்டு டிரோன்கள் தாக்கின. இதன் விளைவாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளது.
Summary
Two Iranian drones struck the US Embassy in Riyadh, triggering a fire and some material damage, as the escalating US-Iran-Israel conflict entered its fourth day. US President Donald Trump warned that retaliation was imminent.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அவருக்குத் துணிச்சல் இருப்பதாக நினைத்தேன்! - இத்தாலி பிரதமரை சாடிய டிரம்ப்!

அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!

அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



