மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஈரான் போர்: அமெரிக்காவின் 3 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்..!

அமெரிக்க போர் விமானங்களைச் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது

News image

எஃப் - 15 போர் விமானங்கள் - கோப்புப்படம் | IANS

Updated On :2 மார்ச் 2026, 12:00 pm

அமெரிக்க போர் விமானங்களைச் குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கும் ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போரில், அமெரிக்காவின் தோழமை நாடான குவைத்தின் வான் பரப்பில் அமெரிக்காவின் எஃப் - 15 போர் விமானங்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த விமானங்களை எதிரி நாட்டு ஊடுருவல் எனத் தவறுதலாக நினைத்து குவைத் வான் பாதுகாப்பு அமைப்பு திங்கள்கிழமை (மார்ச் 2) சுட்டு வீழ்த்தியிருப்பதாக அமெரிக்க ராணுவத்தால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானப்படையின் எஃப் - 15 போர் விமானங்களில் இருந்த வீரர்கள் குழு பாராசூட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் பத்திரமாக வெளியேறியதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

US jets mistakenly shot down by Kuwait

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.