உலக நாடுகளில் முதல்முறையாக அமெரிக்காவின் எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கியிருப்பதாக ஈரான் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கி 20 நாள்களை கடந்துள்ளது.
ஈரானுடனான போரில் முக்கிய திருப்பமாக அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவின் மீது கடந்த வாரம் மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.
மேலும், ஈரானில் உள்ள எண்ணெய் வயல் மீது புதன்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நிலையத்தை ஈரான் தாக்கியது. வளைகுடா நாடுகளின் பல்வேறு எரிபொருள் கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க விமானப் படையின் அதிநவீன 5 ஆம் தலைமுறை போர் விமானமான எஃப் - 35 லைட்னிங் 2 -வை வியாழக்கிழமை ஈரான் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், மத்திய ஈரான் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் எஃப் - 35 ஸ்டெல்த் போர் விமானத்தை உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 2:50 மணிக்கு அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தாக்கினோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தாக்குதலுக்குள்ளான எஃப் - 35 விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், விமானி பாதுகாப்பாக இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் முதன்மை போர் விமானமாக இருக்கும் எஃப் - 35, எதிரிகளால் தாக்க முடியாத மின்னல் வேகத்தில் பயணிக்கக் கூடியது எனப் பெயர் பெற்றது. இந்த விமானத்தை 19 நாடுகள் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், எஃப் - 35 ரக போர் விமானத்தை தாக்கிய முதல் நாடு நாங்கள்தான் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக, அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக ஈரான் அறிவித்ததற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
For the first time in history..! An American F-35 aircraft attacked by Iran!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

அமெரிக்காவின் எஃப்-18 விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்! - விடியோ

அமெரிக்காவின் எஃப் 15 போா் விமானம் வீழ்த்தப்பட்டது: விடியோ வெளியிட்டது ஈரான்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



