ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்! டிரம்ப் அறிவுறுத்தல்

ஒரு பேரல் எண்ணெய் 68 டாலராக உள்ள நிலையில், பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் உள்ளதாக டிரம்ப் கருத்து...

US President Donald Trump

டொனால்ட் டிரம்ப் - ஏபி

Published On :30 ஜூன் 2026, 10:24 am IST

அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் என சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 30) அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் 68 டாலராக உள்ள நிலையில், பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது:

''பெட்ரோல் சில்லறை விற்பனையாளர்கள் உடனடியாக தங்கள் விலையைக் குறைக்க வேண்டும். இந்த அறிக்கைக்கு உடனடியாக எதிர்வினையாற்றும் வகையில் சரியான முடிவை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

கிரேட் அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையை, சில்லறை விற்பனை நிலையங்கள் குறைக்க வேண்டும். சில்லறை விற்பனையாளர்கள் இதனைச் செய்யாவிட்டால், பெரும் பிரச்னையை சந்திக்க நேரிடும்.

ஒரு கேலனுக்கு (3.7 லிட்டர்) 2.50 டாலரை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள். கலிஃபோர்னியாவில் பெட்ரோலுக்காக அதிக வரி வசூலிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

விரைவில் பொருள்களின் விலையை விட வரி அதிகமாகிவிடும். இதனை அமெரிக்கா விரும்பவில்லை. அபத்தமான வரிகளாலும் சொந்த அரசாங்கத்தாலும் துன்புறுத்தப்படும் கலிஃபோர்னியா மக்களும் இதனை விரும்பமாட்டார்கள்'' எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

Petrol prices must be reduced for the sake of America US President Donald Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.