தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

வெனிசுவேலாவில் மீண்டும் நிலநடுக்கம்!

வெனிசுவேலாவில் மீண்டும் ஒரு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டது பற்றி...

Ongoing rescue operations.

தொடர்ந்துவரும் மீட்புப்பணிகள். - படம் - ஏஎன்ஐ

Published On :28 ஜூன் 2026, 8:39 am IST

வெனிசுவேலா கடற்கரைக்கு அருகில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்றை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (இஎம்எஸ்சி) ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வெனிசுவேலாவில் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) சக்தி வாய்ந்த இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 என்ற அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் பல இடங்களில் வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. 

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்றும் ஐ.நா. தெரிவித்தது. இந்த சம்பவம் வெனிசுவேலா நாட்டையே கடுமையாக பாதித்துள்ளது.

உலகின் பல நாடுகளும் நிவாரணப் பொருள்கள் அனுப்புதல், பேரிடர் மீட்புப் படையை அனுப்புதல் போன்ற பல வழிகளில் வெனிசுவேலாவுக்கு உதவிசெய்து வருகின்றன. கடந்த புதன்கிழமை தொடங்கிய மீட்புப் பணிகள் தற்போது வரை தொடர்ந்து கொண்டே உள்ளன. இதனால், பலி எண்ணிக்கையும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேதான் உள்ளன.

இதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. மேலும், புதிதாக உருவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ஏற்கெனவே, வெனிசுவேலா மக்கள் தங்களுடைய நாட்டை விட்டு இடம்பெயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

The European-Mediterranean Seismological Centre (EMSC) has reported detecting a magnitude 5.6 earthquake near the coast of Venezuela on Sunday (June 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.