ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெனிசுவேலா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது

வெனிசுவேலாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு....

Venezuela earthquake

வெனிசுவேலா நிலநடுக்கம்

Published On :18 ஜூலை 2026, 8:59 pm IST

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலியானோரின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் இடைக்கால அரசு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 11 நாட்களாகக் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,740 ஆக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்வதாகவும், அதேசமயம் வெள்ளிக்கிழமை வரை பலியானோரின் எண்ணிக்கை 5,069ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீபியன் கடலுக்கு அருகில் நிலநடுக்கத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட கடலோர மாகாணமான லா குவைராவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணிகளால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 1,331 அதிர்வுகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் கடந்த ஜூன் 24ஆம் தேதி அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 7.2 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவான நிலையில், சில நிமிடங்களில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்துக்கு 856 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 190 கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இது தவிர பாலங்கள், சாலைகள் போன்ற நூற்றுக்கணக்கான பிற உள்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Summary

The death toll from the two powerful earthquakes that shook Venezuela last month rose to 5,069 late on Friday, local authorities said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.