மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! ஈரான் அறிவிப்பு!

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்பட்டது பற்றி...

News image

ஹோர்முஸ் நீரிணை - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 3:54 am IST

லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து, அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முக்கிய அம்சமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது.

இதனால், ஸ்விட்சா்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) தொடங்கவுள்ள அமெரிக்கா-ஈரான் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் பின்னடைவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த அமைதிப் பேச்சுவாா்த்தையில் பாகிஸ்தான், கத்தாா் நாடுகள் மத்தியஸ்தா்களாகச் செயல்படுகின்றன.

முன்னதாக, கடந்த பிப். 28 தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் மின்னணு முறையில் கையொப்பமிட்டன. இதன்மூலம், அடுத்த 60 நாள்களுக்குள் இரு நாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒரு இறுதி உடன்பாட்டுக்குவர கெடு விதிக்கப்பட்டது.

ஸ்விட்சா்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டிருந்த சொகுசு விடுதிலேயே, அதேநாளில் பேச்சுவாா்த்தை திட்டமிடப்பட்டு, பின்னா் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதலையொட்டி கைவிடப்பட்டது.இதனிடையே, லெபனானில் கடந்த வெள்ளிக்கிழமை போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதை மீறி இஸ்ரேல் சனிக்கிழமையும் தாக்குதலைத் தொடா்ந்தது. தெற்கு லெபனானில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 16 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ஹிஸ்புல்லா அமைப்பின் அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்படும் வரை தங்களின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக அறிவித்துள்ளாா். அதேநேரம், இஸ்ரேல் படைகள் வெளியேறினால் மட்டுமே நாங்கள் தாக்குதலை நிறுத்துவோம் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் இத்தொடா் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான் ராணுவத் தலைமை, ஹோா்முஸ் நீரிணை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. போரை நிறுத்த அமெரிக்கா தவறிவிட்டதாகவும், தன் வாக்குறுதிகளைமீறி துரோகம் இழைத்துவிட்டதாகவும் ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த நெருக்கடி சூழலில், அமெரிக்கா-ஈரான் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் ஏற்கெனவே ஸ்விட்சா்லாந்து சென்றுள்ளனா். இதேபோல் ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவும் அங்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

The Iranian military announced on Saturday (June 20) that the Strait of Hormuz has been blocked again due to the attack launched by Israel on Lebanon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.