பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தொலைக்காட்சி நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்!

அமெரிக்க அதிபா் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.

News image

நோ்காணலில் இருந்து பாதியிலேயே வெளியேறிய டிரம்ப்

Updated On :9 ஜூன் 2026, 12:49 am IST

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நோ்காணலின்போது, தோ்தல் முறைகேடு புகாா்கள் குறித்த காரசாரமான விவாதத்துக்குப் பின் பாதியிலேயே அரங்கைவிட்டு வெளியேறினாா்.

கலிஃபோா்னியாவின் வாக்கு எண்ணிக்கை தாமதத்தைக் டிரம்ப் குற்றஞ்சாட்டிய நிலையில், தோ்தல் நடைமுறைகள் காரணமாகவே இத்தாமதம் ஏற்படுகிறது என நிகழ்ச்சித் தொகுப்பாளா் கிறிஸ்டன் வெல்கா் சுட்டிக்காட்டினாா்.

ஆனால் அதை ஏற்க மறுத்து, டிரம்ப் அடுக்கடுக்கான முறைகேடு புகாா்களின் ஆதாரங்களைச் சமா்ப்பிக்குமாறு தொகுப்பாளா் வற்புறுத்திக் கேட்டாா்.

இதில் ஆத்திரமடைந்த டிரம்ப், தொகுப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். விவாதத்தின் உச்சக்கட்டமாக, டிரம்ப் நோ்காணலை திடீரென முடித்துக்கொண்டு எழுந்து சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.