மணிலா : பிலிப்பின்ஸில் இன்று (ஜூன் 8) ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதன் பின்விளைவுகளால் ஏற்பட்ட உயிர்ப்பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்தது.
தீவு நாடான பிலிப்பின்ஸில் இன்று காலை 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தெற்கு பிலிப்பின்ஸின் ‘மிண்டானோ’ தீவை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் தெற்கு பிலிப்பின்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் 17 பேர் பலியாகினர். க்ளான் மலைப்பிரதேச நகரில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவுகளில் 13 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்கள் மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிலிப்பின்ஸில் புதிய கல்வியாண்டின் முதல் நாளான இன்றைய நாளில் பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் நிலநடுக்கம் ஏற்பட்டு சேதத்தை விளைவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வகுப்புகள் நடைபெறவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தெற்கு பிலிப்பின்ஸில் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்குள்ல் கடல் பகுதிகளில் சிறிய அளவிலான ஆழிப் பேரலைகளும் எழும்பின. இதன் தாக்கம் இந்தோனேசியா, பாலௌ மற்றும் தெற்கு ஜப்பானிலும் உணரப்பட்டது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Summary
At least 17 people were killed in a southern Philippine province Monday mostly due to a landslide set off by a 7.8-magnitude earthquake, bringing the overall death toll wrought by the quake in the region to 32
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்! பயந்து அலறிய குழந்தைகள்!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இடிந்து விழுந்த கட்டடங்கள்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




