ஐக்கிய நாடுகள் அவையின் புதிய தலைவராக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் 81 ஆவது அவையின் தலைவருக்கான தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெற்றது.
இந்தத் தேர்தலில், தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் மற்றும் சிப்ரஸ் நாட்டின் சிறப்பு பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
193 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இடம்பெற்ற அவைக்குத் தலைமை வகிப்பதற்காக நடைபெற்ற இந்தத் தேர்தலில் 190 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில், பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது கட்டாயமாகும்.
இந்தத் தேர்தலில், ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகள் பெற்ற நிலையில், வங்கதேசத்தின் கலீலுர் ரஹ்மான் 99 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார். இதன்மூலம், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐ.நா.வின் 81 ஆவது அவைக்கு கலீலுர் ரஹ்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 1986 ஆம் ஆண்டு ஐ.நா.வின் 41 ஆவது அவைக்கு வங்கதேசத்தின் ஹுமாயூன் ரஷீத் சௌத்ரி தலைவராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Bangladesh's Foreign Minister, Khalilur Rahman, has been elected as the new head of the United Nations.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









