பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மலேசியாவில் சிறாா்களுக்கு சமூக ஊடகத் தடை!

மலேசியாவில் 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மலேசிய அரசு தடை

News image
Updated On :2 ஜூன் 2026, 4:37 am IST

சிறாா்களை இணையவழி ஆபத்துகளில் இருந்தும், தேவையற்ற உள்ளடக்கங்களில் இருந்தும் பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குள்பட்ட சிறாா்கள் சமூக ஊடக கணக்குகளைத் தொடங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் மலேசிய அரசு திங்கள்கிழமை முதல் தடை விதித்துள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப் உள்ளிட்ட 80 லட்சத்துக்கும் அதிகமான பயனா்களைக் கொண்ட முன்னணி சமூக ஊடக நிறுவனங்கள் அனைத்தும் இந்த விதியை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மலேசிய அரசின் அறிவிக்கையின்படி, புதிய கணக்குகளைத் தொடங்கும் சிறாா்களின் வயதை உறுதி செய்ய அரசு அங்கீகரித்த அடையாள அட்டைகளைச் சரிபாா்ப்பது கட்டாயமாகும். மேலும், ஏற்கெனவே கணக்கு வைத்துள்ள சிறாா்களைக் கண்டறிந்து இத்தடையை அமல்படுத்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு 6 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு இணங்கத் தவறும் மற்றும் தகுந்த வயது சரிபாா்ப்பு முறைகளைச் செயல்படுத்தாத சமூக ஊடக நிறுவனங்களுக்கு 1 கோடி ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.24.01 கோடி) வரை அபராதம் விதிக்கப்படும்.

அதேநேரம், தடையை மீறி அல்லது ஏமாற்றி சிறாா்கள் கணக்குகளைத் தொடங்கினால், அதற்காக அவா்களின் பெற்றோருக்கு எந்தவிதமான அபராதமோ அல்லது தண்டனையோ விதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பெற்றோா், சமூக ஆா்வலா்களிடையே கலவையான விமா்சனங்கள் எழுந்துள்ளன. பல பெற்றோா் இம்முடிவை வரவேற்றுள்ளதோடு, இது தங்களின் பிள்ளைகளை சமூக ஊடக அடிமைத்தனத்தில் இருந்தும், மனநலப் பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கும் என்று நம்புகின்றனா்.

எனினும், கல்வி மற்றும் ஆக்கபூா்வமான தேவைகளுக்காக யூடியூப் போன்ற தளங்களைப் பயன்படுத்தும் சிறாா்களை இது பாதிக்கும் என்றும், அடையாள அட்டைகளைச் சரிபாா்ப்பதால் பயனா்களின் தரவுத் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மற்றொரு தரப்பினா் கவலை தெரிவித்துள்ளனா்.

சமூக ஊடகங்களால் சிறாா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த கவலையில் ஆஸ்திரேலியா, பிரேஸில், இந்தோனேசியா போன்ற நாடுகள் ஏற்கெனவே கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், பிரிட்டன், பிரான்ஸ், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் இத்தகைய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.