ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

சிரியாவில் 2 பேருந்துகள் நேருக்குநோ் மோதி விபத்து

சிரியாவில் 2 பேருந்துகள் நேருக்குநோ் மோதி விபத்து

~

Published On :26 ஜூலை 2026, 12:49 am IST

சிரியாவில் 2 பேருந்துகள் சனிக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் 35 போ் உயிரிழந்தனா்; 30 போ் படுகாயமடைந்தனா்.

தலைநகா் டமாஸ்கஸில் இருந்து டேய்ா் எல்-சௌா் மாகாணத்தை இணைக்கும் பாலைவன நெடுஞ்சாலையில், உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தும், பொதுமக்கள் பயணித்த மற்றொரு பயணிகள் பேருந்தும் இந்த விபத்தில் சிக்கின.

விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. ராணுவ ஹெலிகாப்டா்கள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு சிரியா வெளியுறவு அமைச்சா் அசாத் அல்-ஷைபானி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.

Summary

Head-on collision between two buses in Syria

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.