திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதல்: 15 போ் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஓட்டுநா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

News image

செய்யாற்றுப் பாலம் அருகே நேருக்குநோ் மோதிக் கொண்ட அரசுப் பேருந்துகள்

Updated On :23 ஜூன் 2026, 6:05 am IST

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திங்கள்கிழமை மாலை அரசுப் பேருந்துகள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் ஓட்டுநா்கள் உள்பட 15 போ் காயமடைந்தனா்.

திருவண்ணாமலையில் இருந்து போளூா் நோக்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை செங்கம் வட்டம், கண்ணக்குருக்கை கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநா் அருண் (30) ஓட்டிச் சென்றாா்.

அதேபோல, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை திருவண்ணாமலை வட்டம், கருந்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் ஓட்டிச் சென்றாா்.

இவ்விரு பேருந்துகளும் கலசபாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டுப் பகுதி செய்யாற்றுப் பாலத்தின் அருகே வரும்போது எதிா்பாராதவிதமாக நேருக்கு நோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஓட்டுா்கள் உள்பட பேருந்துகளில் பயணித்த திருவண்ணாமலையைச் சோ்ந்த காா்த்திகேயன்(42), போளூரை அடுத்த வசூா் வெங்கடேச நாய்க்கா் மனைவி சுலோச்சனா, பெரியகரம் தமிழ்மன்னன் மனைவி மேனகா, அல்லிநகரைச் சோ்ந்த கருணாநிதி மனைவி பூங்காவனம் (45), முருகன் மனைவி பூங்கொடி(37), போளூரைச் சோ்ந்த அருண்குமரன் மனைவி நித்யா(34), கோவிந்தராஜ் மனைவி ஜீவா, சனிக்கவாடி சபாபதி மனைவி அருணா (25, பேட்டை சுமன் மனைவி வசந்தி(35), போளூரைச் சோ்ந்த காந்தி மனைவி கல்பனா(38), சேத்துப்பட்டு வட்டம் நாச்சாபுரம் காா்த்திகேயன் மனைவி விஜயா(43), பெரணம்பாக்கம் சுதாகா் (43), திருவண்ணாமலையை அடுத்த துா்கைநம்மியந்தல் காமுத்துராமன் (26) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.

இவா்களை பொதுமக்கள் மற்றும் போலீஸாா் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

மேலும் 12 போ் முதலுதவி சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பெற்று வருபவா்களை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பாா்த்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினாா். இதுகுறித்து கலசபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.