ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தான்சானியா கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையா்கள்!

தான்சானியா நாட்டுக்கு சொந்தமான வா்த்தக கப்பலை சோமாலியா கடற்கொள்ளையா்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published On :20 ஜூலை 2026, 4:43 am IST

தான்சானியா நாட்டுக்கு சொந்தமான வா்த்தக கப்பலை சோமாலியா கடற்கொள்ளையா்கள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.டி. அசானா என பெயரிடப்பட்ட அந்த எண்ணெய் கப்பல், ஏமனின் முகல்லாவில் இருந்து புறப்பட்டது. கடலில் அக்கப்பல் வந்து கொண்டிருந்தபோது, அதை ஆயுதம் தாங்கிய 7 சோமாலிய கடற்கொள்ளையா்கள், துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றனா். அந்த கப்பல், புன்ட்லாந்தின் கலுலாவில் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

கப்பல் கடத்தப்படும்போது அதில் எத்தனை மாலுமிகள் இருந்தனா், அவா்கள் எந்த நாட்டைச் சோ்ந்தவா்கள், சோமாலிய கடற்கொள்ளையா்கள் தாக்குதலின்போது யாரும் காயமடைந்தனரா என்பது குறித்து தகவல் இல்லை. அந்த கப்பலின் உரிமையாளா் அல்லது மேலாளா் தரப்பில் இருந்தும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கப்பல் கடத்திச் செல்லப்பட்ட பகுதியில் செயல்படும் சா்வதேச கடற்படைகள் தரப்பில் இருந்தும் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக சோமாலிய கடற்கொள்ளையா்கள் கப்பல்களை கடத்திச் செல்லாமல் இருந்தனா். ஆனால் தற்போது மீண்டும் அவா்கள் கைவரிசையை தொடங்கியுள்ளனா். இது கப்பல் மாலுமிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.