ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷ் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் பிரிட்டிஷுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வர்த்தகக் கப்பல் - கோப்புப் படம்

Published On :17 ஜூலை 2026, 4:34 pm IST

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஓமனுக்கு அருகில் பயணித்த எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் ராணுவம் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக செயல்பாட்டு மையம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இன்று அதிகாலை கப்பலை ஏவுகணை ஒன்று தாக்கியதாகவும், கப்பலின் இடதுபுறத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாமல் கப்பல் அடுத்த துறைமுகத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஓமன் கடற்பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இந்தத் தாக்குதல் தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

போர்நிறுத்த அறிவிப்பு வெளியான பின்னரும் ஈரானும் அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதிலடியாக, அவர்கள் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், பஹ்ரைன், கத்தார் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை குவைத்தின் மின்சார நிலையம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல, ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

Summary

Attack on British oil tanker in the Strait of Hormuz!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.