
இந்தியா மீது 100% வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு!
இந்தியா மீது அமெரிக்கா 100 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்களின் ஆதரவு குறித்து...
அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP
இந்தியா மீது அமெரிக்கா 100 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால்தான், அந்நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, உக்ரைனுடன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளும் என டிரம்ப் கூறுகிறார்.
இருப்பினும், டிரம்ப்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் 60-க்கும் மேற்பட்டோர் ஆதரவளித்துள்ளனர். இந்த மசோதாவுக்கு அமெரிக்காவின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவளித்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப்பும் ஆதரவளித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் இந்தியா உள்பட சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளும் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படும். இருப்பினும், ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில், மற்றொரு நாட்டின் (ரஷியா) போர் முயற்சியைத் தடுப்பதற்காக, சுங்க வரிகளை ஒரு புவிசார் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு (அமெரிக்க) காங்கிரஸ் வெளிப்படையாக அங்கீகாரம் அளிப்பது இதுவே முதல் முறையாகும்.
Summary
U.S. Senators unveil bill for 100% tariffs on India, four others for buying Russian oil
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





