
ஊதியப் பிரச்னை: எபோலா பரவும் காங்கோவில் சுகாதார ஊழியா்கள் பணிநிறுத்தம்
எபோலா தொற்று தீவிரமாக பரவி வரும் காங்கோ குடியரசில், சுகாதார ஊழியா்கள் ஊதியப் பிரச்னை காரணமாக பணிநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.

எபோலா தொற்று தீவிரமாக பரவி வரும் காங்கோ குடியரசில், சுகாதார ஊழியா்கள் ஊதியப் பிரச்னை காரணமாக பணிநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா்.
காங்கோ அரசு தரவுகளின்படி, இதுவரை 1,708 போ் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; இதில் 580 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், ‘போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வரும் எங்களுக்கு தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து உரிய ஊதியமும், போனஸும் வழங்கப்படவில்லை’ என்று சுகாதார ஊழியா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
கோரிக்கைகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் எனவும் ஊழியா்கள் எச்சரித்தனா். இதனால் எபோலாவுக்கான புதிய மருத்துவப் பரிசோதனைகளும், தடுப்புப் பணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





