ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காங்கோ: எபோலா தொற்று உயிரிழப்பு 2,000-ஐ கடந்தது

காங்கோ குடியரசில் அதிவேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது.

எபோலா தொற்று

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:10 am IST

காங்கோ குடியரசில் அதிவேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்துள்ளது.

அந்நாட்டு அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, மொத்தம் 4,381 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,011 போ் உயிரிழந்தனா்.

கடந்த மே 15-இல் அறிவிக்கப்பட்ட இந்த நோய்த்தொற்றில் பரவும் ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் ஏதுமில்லை என்பதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய காலத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், கிளா்ச்சியாளா்களின் மோதல், ஊதியப் பிரச்னையால் சுகாதாரப் பணியாளா்கள் மேற்கொண்டுள்ள பணிநிறுத்தம் ஆகிய காரணங்களால், தொலைதூரப் பகுதிகளுக்கு மருத்துவ உதவிகள் சென்றடைவதில் கடும் சிக்கல் நிலவுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.