ஈரானை முழுவதுமாக அழித்தோம் என அமெரிக்காவின் 250வது சுதந்திர நாள் விழாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர நாள் கொண்டாட்டம் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது வாஷிங்டனில் ஏற்பட்ட தீவிர புயல் அபாயம் காரணமாக டொனால்ட் டிரம்ப்பின் திட்டமிடப்பட்ட உரை மற்றும் அணிவகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், நிகழ்வு அரங்கில் கூடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்ட போதிலும் தனது உரையை ஆற்றுவேன் என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அதன்படி அவர் ஆற்றிய உரையில் பேசியதாவது:
உலகின் மிக வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா உருவானது வரலாற்றில் தற்செயலான நிகழ்வு அல்ல. எனது முதல் பதவிக்காலத்தில் ராணுவத்தை நாங்கள் புதுப்பித்தோம். அதனை மூன்றாவது பதவிக்காலத்தில்தான் சிறிதளவு பயன்படுத்தினோம்.
அதைப்பற்றி முழுவதுமாகக் கூறி சர்ச்சையைக் கிளப்ப நான் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்தினோம், மகத்தான வெற்றியையும் பெற்றோம். வெனிசுவேலா மற்றும் ஈரானைப் பாருங்கள். நாங்கள் அதை முழுவதுமாக அழித்தோம். அவர்களின் ராணுவத்தையே முற்றிலுமாக துடைத்தெறிந்தோம் என்று டிரம்ப் உரையாற்றினார்.
முன்னதாக அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தானதால் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
President Donald Trump stated at the celebration of America's 250th Independence Day that they had completely destroyed Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










