ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 2,300 பேர் பலி! 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பு

வெனிசுவேலா 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவது குறித்து...

Women hold candles during a vigil honoring victims of the earthquakes in Venezuela

நிலநடுக்கங்களில் உயிரிழந்தோருக்கு பொதுமக்கள் அஞ்சலி - AP

Published On :3 ஜூலை 2026, 8:48 am IST

வெனிசுவேலா நாட்டில் ஜூன் 24 ஆம் தேதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இந்தப் பேரிடரால், வெனிசுவேலா நாட்டில் இதுவரை 2,295 பேர் பலியானதாகவும், 11,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50,000 -க்கும் மேற்பட்டோர் மாயமானதாகவும், அவர்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை என அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியால் வெனிசுவேலா நிலைகுலைந்துள்ளது. இந்த நிலையில், வெறும் 39 விநாடிகளில் ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டுக்கு நேரடிப் பொருளாதார இழப்பு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ. 95,000 கோடி) தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நிலநடுக்கங்களால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக வெனிசுவேலாவில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 6 மணி தொடங்கி, 7 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Summary

Venezuela quakes death toll rises to 2,295; 7-day national mourning declared

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.