வரி விதிப்பு மூலம் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தடுக்கப்பட்டது - அமெரிக்க நிதியமைச்சா்


‘அமெரிக்காவின் 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு மூலம் ரஷியாவிடமிருந்து இந்தியா தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தது தடுத்து நிறுத்தப்பட்டது’ என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தாா்.
பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரியை விதித்த அமெரிக்கா, பின்னா், ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெயை வாங்கி உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றஞ்சாட்டி மேலும் 25 சதவீத வரியை விதித்தது. இதனால், இரு நாடுகளிடையேயான உறவு சற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுவிட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் புதன்கிழமை பங்கேற்ற ஸ்காட் பெசன்ட் இதுகுறித்து கூறியதாவது:
உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கப்பட்ட பிறகு ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடங்கியது. அதைத் தொடா்ந்து இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 25 சதவீத வரியை விதித்தாா். அதன் மூலம், ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தடுத்து நிறுத்தப்பட்டது என்றாா்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை அமெரிக்க மேலவை உறுப்பினா்கள் (செனட்) லிண்ட்சே கிரஹாம் அறிமுகம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். இதை மேலவையே முடிவு செய்யலாம். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை அதிபா் டிரம்புக்கு வழங்க மேலவை விரும்புகிறது. ஐரோப்பிய நாடுகளும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து, உக்ரைன் மீதான போருக்கு உதவி வருகின்றன’ என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...