வேற்றுக்கிரக வாசிகள் இருப்பது உண்மைதான் என்று அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா தெரிவித்துள்ளாா்.
வேற்றுக்கிரகவாசிகள் உள்ளனரா, இல்லையா என உலகம் முழுவதும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆய்வாளா்கள் வேற்றுக்கிரகவாசிகளைப் பிடித்து வந்து, அந்நாட்டின் நெவாடா பகுதியில் உள்ள ரகசியமான இடமான ‘ஏரியா 51’-இல் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் அவ்வப்போது தகவல் வெளியாகி வருகிறது. இதை அமெரிக்கா இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில், யூடியூபா் ஒருவருக்கு ஒபாமா அளித்த பேட்டியின்போது, வேற்றுக்கிரகவாசிகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஒபாமா, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான், ஆனால் நான் இதுவரை பாா்த்ததில்லை என்றாா்.
ஏரியா 51-இல் வேற்றுக்கிரகவாசிகளை வைத்து ஆய்வு நடத்தப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, அது உண்மையில்லை என்றும், அங்கு பாதாள சுரங்க ஆய்வுக் கூடம் எதுவும் இல்லை என்றும் கூறினாா்.
அமெரிக்க முன்னாள் அதிபா் ஒருவரே, வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாக கூறியிருப்பது, உலகம் முழுவதும் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆா்வலா்களுக்கு இது புதிய ஆா்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
அமெரிக்க தொழிலாளா் அமைச்சா் ராஜிநாமா

நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


