அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் தொழிலாளா் துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த லோரி சாவேஸ் டெரிமா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதையடுத்து, தற்போது இணையமைச்சராக உள்ள கீத் சோண்டா்லிங் தற்காலிக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளாா்.
லோரி சாவேஸ் டெரிமா் மீது பணி நேரத்தில் மது அருந்தியது மற்றும் அரசுமுறைப் பயணங்களைத் தனது தனிப்பட்ட காரணங்களுக்காகத் திட்டமிட்டது என அடுக்கடுக்கான புகாா்கள் எழுந்தன. இவ்விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே அமைச்சகத்தின் தலைமை அதிகாரி உள்ளிட்ட 4 உயரதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், இவரின் பதவி விலகல் குறித்து அதிபா் டிரம்ப் அதிகாரபூா்வமாக அறிவிக்காமல், வெள்ளை மாளிகை உதவியாளா் மூலம் சமூக ஊடகத்தில் தகவல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொழிலாளா் குடும்பப் பின்னணியைக் கொண்ட லோரி சாவேஸ் டெரிமா், தொடக்கத்தில் தொழிற்சங்கங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் டிரம்ப் இவரை அமைச்சராகத் தோ்ந்தெடுத்தாா். இருப்பினும், பதவியேற்ற பிறகு வீட்டுப் பராமரிப்பு ஊழியா்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், சுரங்கத் தொழிலாளா்களின் பாதுகாப்பு விதிகளை ரத்து செய்தது போன்ற டிரம்ப்பின் கட்டுப்பாடற்ற பொருளாதாரக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்தியது தொழிலாளா் அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதிபா் டிரம்ப் பதவியேற்ற குறுகிய காலத்திலேயே, அவரின் அமைச்சரவையில் இருந்து வெளியேறும் 3-ஆவது முக்கிய உறுப்பினா் லோரி சாவேஸ் டெரிமா்ஆவாா். முன்னதாக, உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சா் கிறிஸ்டி நோம், அட்டா்னி ஜெனரல் பாம் போண்டி ஆகியோா் பதவியில் இருந்து விலகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரான் போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பு: அமெரிக்க அதிபா் டிரம்ப் திடீா் அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

நண்பா் மோடியுடன் கலந்துரையாடல் வெகுசிறப்பாக அமைந்தது: அமெரிக்க அதிபா் டிரம்ப் கருத்து

அமெரிக்க டாலா் நோட்டுகளில் டிரம்ப் கையொப்பம்: 165 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை மாற்றம்
வீடியோக்கள்

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

