/

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’.. சீன பயணத்தை உறுதிசெய்த டிரம்ப்!

‘அதிபர் ஜின் பிங்கை சந்திக்கவுள்ளேன்’ என சீன பயணத்தை உறுதிசெய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஜின் பிங்.
Updated On :13 பிப்ரவரி 2026, 3:37 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகிற ஏப்ரல் மாதம் சீன அதிபர் ஷி ஜின் பிங்கை சந்திக்கவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தச் சந்திப்பில் வாஷிங்டன் - பெய்ஜிங் இடையே நட்புறவை மீண்டும் வலுப்படுத்தியுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் ஏப்ரல் மாதம் பெய்ஜிங் செல்வதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், நிகழாண்டில் (2026) சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப். 4 ஆம் தேதி சீன அதிபர் ஜின் பிங்குடன் செல்போன் வாயிலாக டிரம்ப் உரையாடினார். அந்த உரையாடலின்போது, சீனா வருமாறு அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனடிப்படையிலேயே டிரம்ப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதுகுறித்து தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான் ஏப்ரல் மாதம் அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கப் போகிறேன். அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர் அமெரிக்கா வருவார். அதை நான் ஆவலுடன் வரவேற்க காத்திருக்கிறேன். சீனாவுடனான எங்கள் உறவு இப்போது மிகவும் நன்றாக உள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார்.

summary

Donald Trump said that he will visit China in April to meet Xi Jinping, with the Chinese premier expected to arrive in Washington later this year, amid a fragile post-trade war truce.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.