டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இராக்: சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாகச் செயல்பட்டவருக்கு தூக்கு!

News image
இராக் நாடாளுமன்ற வளாகம்- AP Photo
Updated On :9 பிப்ரவரி 2026, 11:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

பாக்தாத் : இராக்கில் சதாம் ஹுசைன் ஆட்சியில் பாதுகாப்பு உயரதிகாரியாக இருந்தவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இராக்கில் கடந்த 1979களில் அதிபராக சன்னி பிரிவு தலைவரான சதாம் ஹுசைன் இருந்தபோது, பாதுகாப்புப்பிரிவில் ‘மேஜர் ஜெனரல்’ உயர் பதவியில் இருந்தவர்களுள் முக்கிய நபரான சாதௌன் சப்ரி அல்-ஃகைசி மீது, மனித உரிமைகளுக்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்படிருந்த நிலையில், அவர் கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.

சதாம் ஹுசைனுக்கெதிராக நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்களுள் இராக்கின் ஷிட் முஸ்லீம் அதிகாரியான முகமது பாஃகிர் அல்-சதர் குறிப்பிடத்தக்கவராவார்.

இந்த நிலையில், அல்-சதர் மற்றும் அல்-ஹகீம் குடும்ப உறுப்பினர்களைச் சித்திரவதைச் செய்து கொன்றதிலும், சதாம் ஹுசைனுக்கெதிரான போராட்டங்களில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதிலும் தொடர்பிருப்பதாக அல்-ஃகைசி மீது குற்றம்சுமத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாதௌன் சப்ரி அல்-ஃகைசிக்கு தூக்கு தண்டனை நிறவிவேற்றப்பட்டதாக இராக் அரசு திங்கள்கிழமை(பிப். 9) தெரிவித்துள்ளது.

summary

Iraq announced on Monday that a high-level security officer during the rule of Saddam Hussein has been hanged for his involvement in the 1980 killing of a prominent Shiite cleric.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.