/

2-ஆம் உலகப்போரில் சிங்கப்பூருக்காகப் போராடி வீரமரணமடைந்த சீக்கியர்களுக்கு நினைவஞ்சலி!

2-ஆம் உலகப்போரில் வீரமரணமடைந்த சிங்கப்பூர் சீக்கியர்களுக்கு நினைவஞ்சலி!

News image
சிங்கப்பூர்
Updated On :8 பிப்ரவரி 2026, 1:38 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் - மலாயாவைப் பாதுகாக்கப் போராடி வீரமரணம் அடைந்த சீக்கிய வீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) நடைபெற்றது. கிராஞ்சி போர் நினைவிடத்தில் நடைபெற்ற நினைவேந்தலில், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய படைகளை எதிர்த்துப் போராடி மரித்த 3,318 சீக்கிய வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நினைவேந்தலில், சிங்கப்பூர் அமைச்சர் முரளி பிள்ளையுடன், இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, மலேசியா, நியூஸிலாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர் ஆணையர்களும் கலந்துகொண்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் சுமார் 400க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் போர் நினைவிடத்தில் திரண்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

summary

A Singapore minister and High Commissioners from seven Commonwealth countries, including India, joined the Sikh community here on Sunday to remember soldiers who laid their lives while defending Singapore-Malaya during World War II.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.